மும்பை தீவிரவாத தாக்குதல்!. குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்!. அமெரிக்க நீதிமன்றம்!
Mumbai attack: மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டநிலையில், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்ட நிலையில், 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா அமைப்புதான் மூளையாக இருந்துள்ளது விசாரணையில் அம்பலமானது.
இதில் பின்னணியாக இருந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள பலரை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வழக்கின் குற்றவாளியாக தஹாவூர் ராணா என்பவர், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ உடன் இணைந்து சதி திட்டம் தீட்டியதாக இந்தியா கண்டுபிடித்தது.
பாகிஸ்தானை சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளநிலையில், அவரை இந்தியா கொண்டுவர பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தற்போது ராணாவை இந்தியாவுக்கு அழைத்து சென்று விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, ராணாவை விரைவில் இந்தியா கொண்டுவரும் நடவடிக்கையை வெளியுறவுத்துறை முன்னெடுக்கும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Readmore: இந்தியாவின் அணு ஆயுத ரகசியங்கள் கசிவு!. ஏவுகணைகள் கடலில் மறைத்து வைப்பு!. அமெரிக்க விஞ்ஞானிகள்!