For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உரி தாக்குதலில் ஐஎஸ்ஐ பங்கு.! பாகிஸ்தானை கார்னர் செய்த அமெரிக்கா.! இந்திய முன்னாள் தூதர் பகிர் தகவல்.!

12:09 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
உரி தாக்குதலில் ஐஎஸ்ஐ பங்கு   பாகிஸ்தானை கார்னர் செய்த அமெரிக்கா   இந்திய முன்னாள் தூதர் பகிர் தகவல்
Advertisement

பாகிஸ்தானிற்கான இந்திய தூதராக இருந்தவர் அஜய் பிசாரியா. இவர் 'அங்கேர் மேனேஜ்மென்ட்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைக்குரிய தூதரக உறவு' என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தொடுத்த தீவிரவாத தாக்குதல்களையும் அதனை இந்தியா எதிர்கொண்ட விதத்தையும் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் இந்திய தூதராக இருந்தபோது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவிய அரசியல் மற்றும் போர் சூழல்களையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவின் பதான்கோட் விமான தளம் மற்றும் உரி ராணுவ தளங்களின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையும் அதில் அமெரிக்காவின் தலையிட்டால் பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்துள்ளார். இந்திய ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஆதாரத்துடன் நிரூபித்ததால் அன்றைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதையும் விவரித்து இருக்கிறார்.

மேலும் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு எதிராக சதி செய்து நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு நாட்டிலிருந்து ராஜ துரோக குற்றச்சாட்டால் வெளியேற வேண்டிய சூழல் உருவானதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற அரசியல் சூழ்நிலைகளை தனது புத்தகத்தில் தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் அஜய் பிசரியா. மேலும் நவாஸ் ஷெரிப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சியில் இருந்தபோது 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கன்வாயில் அவர்களது வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அடைந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கிலோமீட்டர் ஊடுருவி சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாத முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன. இதில் 350 இருக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்த் தாக்குதல் நடத்துவதற்காக இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்திய விமானம் பாகிஸ்தான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அதிலிருந்து தப்பிய விமானப்படை வீரர் அபிநவ் முகுந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய அரசின் தீவிர முயற்சியினால் அவர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவங்கள் நிறைந்த இரவை ரத்தம் சிந்திய இரவு என பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் அஜய் பிசரியா தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய ஏவுகணைகள் தங்களது முக்கிய இலக்குகளை தாக்கி அளிக்கும் என்ற அச்சம் பாகிஸ்தான் ராணுவத்திடம் நிலவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து ஒன்பது இந்திய ஏவுகணைகள் தயாராக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இனி ஒருபோதும் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை. தீவிரவாதம் அதற்குரிய எதிர்வினையை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு இந்தியா கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அதன் பிறகு தீவிரவாத தாக்குதல்கள் அடியோடு அழிந்திருக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் 1980 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. 1990களில் காஷ்மீர் மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. இதனைத் தொடர்ந்து 2000 வருடங்களின் தொடக்கத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டு மிகப் பெரிய தாக்குதலான மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தேறியது. அப்போது இந்தியா தீவிரவாதத்திற்கு எதிரான பயங்கரமான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

1998 ஆம் வருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தங்களது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில் அணுகுண்டு பரிசோதனை நடத்தியது. இந்தியா தீவிரவாதத்தின் கோர முகத்தை கட்டுப்படுத்துவதில் பல வழிகளை ஆராய்ந்து வந்தது. எனினும் 2008 ஆம் வருட மும்பை தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்தின் எல்லை எது என்பதை இந்தியா உணர்ந்து கொண்டது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பேச்சுவார்த்தைகளை விட ராணுவ நடவடிக்கைகளை சிறந்தது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட தருணம் அதுவாக தான் இருக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அஜய் பிசாரியா.

Tags :
Advertisement