முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எப்போது ஐபிஎல் ஏலம்?… ஏலத்திற்கு முன்பே முக்கிய வீரரை தட்டித்தூக்கிய மும்பை!… வெளியான புதிய தகவல்!

12:41 PM Nov 04, 2023 IST | 1newsnationuser3
Advertisement

2024 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் டிச. 19ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏலத்திற்கு முன்னதாகவே வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரொமாரியோ ஷெப்பர்ட்-யை மும்பை அணி வாங்கியுள்ளது.

Advertisement

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை ஏலம் துபாயில் நடைபெறும் என தெரிகிறது. அதேநேரம், பெண்கள் பிரிமியர் லீக்கிற்கான ஏலம் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு நவம்பர் 15 வரை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் அவகாசம் உள்ளது. நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியலை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஏலத்திற்கு வீரர்கள் குழு தயாராகி விடும். வரவிருக்கும் ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் ரூ.100 கோடியை வைத்திருக்கும். இது கடந்த ஆண்டை விட ரூ.5 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக ஒரு வீரரை வாங்கிய முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் ரொமாரியோ மும்பைக்காக விளையாடினால் இது அவரது மூன்றாவது அணியாக இருக்கும். ரொமாரியோ இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஐபிஎல்லில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2023 ஐபிஎல்லில், அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 1 போட்டியில் மட்டுமே விளையாடினார். அதில் அவர் இறங்கிய முதல் பந்திலேயே அவுட் ஆனார். முன்னதாக 2022 இல், ஷெப்பர்ட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒரு பகுதியாக இருந்தது. ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் இருந்து தான் ரொமாரியோ ஷெப்பர்ட் அறிமுகமானார்.

கடந்த 2022 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி ரொமாரியோ ஷெப்பர்ட்-யை ரூ.7.75 கோடிக்கு வாங்கியது. இதற்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை சென்ற ஆண்டு ரூ. 50 லட்சம் கொடுத்து வாங்கியது. ஷெப்பர்ட் இதுவரை மொத்தம் 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் பேட்டிங்கில் 58 ரன்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024 ஐபிஎல் சீசனுக்கான ஆயத்த பணிகளை மும்பை இந்தியன்ஸ் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ஏலத்திற்கு முன் வீரர்களை வாங்க செய்யலாம். இதனால், மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது.

Tags :
2024 ஐபிஎல்IPL2024ஏலத்திற்கு முன்பேடிசம்பர் 19ல் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?முக்கிய வீரரை தட்டித்தூக்கிய மும்பைவெளியான புதிய தகவல்
Advertisement
Next Article