ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் கடன் மோசடி வழக்கு: சந்தா, தீபக் கோச்சாருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்றம்.!
கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பு சட்ட விரோதமாக கைது செய்ததை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் வழங்கிய உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை காரணம் காட்டி அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்.ஆர்.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இடைக்கால ஜாமீன் உத்தரவை உறுதி செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
கோச்சாரின் வழக்கறிஞர் அமித் தேசாய் கைது நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என் வாதிட்டார்.இந்த வழக்கில், அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டபோது, சட்டப்படி கட்டாயமாக எந்த ஒரு பெண் அதிகாரியும் ஆஜராகவில்லை. ஒரு பெண்ணாக இருந்ததால், அவரை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்திருக்க முடியாது என்று தேசாய் வாதிட்டார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் குல்தீப் பாட்டீல், கோச்சார் தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை , அவருக்குப் பிறகு வழக்கில் கைது செய்யப்பட்ட வீடியோகான் தலைவர் வேணுகூவல் தூத்துடனும் அவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமர்பித்தார்.
வீடியோகான்-ஐசிஐசிஐ வங்கி கடன் வழக்கு தொடர்பாக, டிசம்பர் 23, 2022 அன்று தம்பதியினர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கோச்சார் தம்பதியினரை தவிர, வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத்தையும் சிபிஐ கைது செய்தது.
வங்கி ஒழுங்குமுறை சட்டம், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கியின் கடன் கொள்கையை மீறி, தனியார் துறை ஐசிஐசிஐ வங்கி, தூத் நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளது என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
கிரிமினல் சதி மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் சுப்ரீம் எனர்ஜி, வீடியோகான் இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் நுபவர் ரினிவபிள்ஸ் (என்ஆர்எல்) உடன் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மற்றும் தூத் ஆகியோரை சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.