மும்பை தாக்குதல்!… முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டுகள் சிறை!… ஐநா பாதுகாப்பு கவுன்சில்!
உலகையே உலுக்கிய மும்பை கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அவன் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான நகரமான மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் (26/11) உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைகளில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஏந்தி வந்த பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டு தள்ளினார். இதில் சுமார் 164 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்தான் ஹபீஸ் சயீத்.
இவரை பிடிக்க இந்தியா நீண்ட காலமாக போராடி வருகிறது. அமெரிக்கா இவரது தலைக்கு ரூ.83 கோடியை நிர்ணயித்துள்ளது. ஆனால் ஹபீஸ் சையது தற்போது வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். 26/11 தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அரசு இவரை, பயங்கரவாத திட்டங்களுக்கு நிதி திட்டியதாக கூறி கைது செய்தது. இப்படி இவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்தநிலையில், சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது. இந்தநிலையில், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவனுக்கு 78 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (யுஎன்எஸ்சி) திருத்தப்பட்ட பட்டியலின்படி, பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் தீவிரவாதி ஹபீஸ் சயீத் உள்ளார். ஏழு தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றங்களில் அவருக்கு 78 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்துக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.