முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மும்பை தாக்குதல்!… முக்கிய பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டார்!… ஐ.நா. உறுதி!

05:10 AM Jan 12, 2024 IST | 1newsnationuser3
Advertisement

மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய நண்பரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தொடங்கியவருமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி கடந்த ஆண்டு மே 23ம் தேதி சிறையிலேயே இறந்துவிட்டார் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான நகரமான மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைகளில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஏந்தி வந்த பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டு தள்ளினார். இதில் சுமார் 164 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.

இதேபோல், பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய நண்பரும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தொடங்கியவருமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி சிறையிலேயே மரணம் அடைந்துவிட்டதாக ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பகுதியில் பாகிஸ்தான் அரசின் காவலில் இருந்த ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு மே 23ம் தேதி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஐநா.-வால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட புத்தாவி, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், இவருக்கு 16.5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. கடந்த மே மாதமே புட்டாவி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளி வந்து இருந்த நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் பாதுபாக்கு சபையும் இதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் கைதான, 77 வயதான புத்தாவி, லாகூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள ஷேகுபுரா மாவட்ட சிறைச்சாலையில் 2019 அக்டோபரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் இதையடுத்து, கடந்தாண்டு மே மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் புத்தாவின் இறுதிச் சடங்கு முரிட்கேயில் உள்ள லஷ்கர் இ தொய்பா இயக்க தலைமையகத்தில் நடைபெற்றதாகவும், இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புக்கு மத்தியில் பங்கேற்றனர் எனவும் பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Mumbai attackterrorist Hafiz Abdul Salam Buddawi deadUN. Confidentஐ.நா. உறுதிசிறையிலேயே இறந்துவிட்டார்முக்கிய பயங்கரவாதிமும்பை தாக்குதல்ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி
Advertisement
Next Article