For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்..!! 100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாது..!! தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி..!!

07:22 AM May 18, 2024 IST | Chella
ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்     100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாது     தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி
Advertisement

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் உச்சம் அடைந்த போது மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்தது. எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு மின்சார தேவை உச்சக்கட்டத்தை தொட்டது. இதனால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியம் மிகப்பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள, 2.34 கோடி வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் பல ஆயிரம் கோடி மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.

Advertisement

இந்நிலையில் தான், 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுகிறது. அந்த உத்தரவில், வாடகை வீட்டுக்காரர்களுக்கான மானியத்தில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும்.

ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ள வசதி படைத்தவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், வீட்டு உபயோகத்திற்கு இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் ஆனால் 100 யூனிட் இலவசம் இல்லை என்று மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் போலியானது எனவும் இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Read More : மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! BECIL நிறுவனத்தில் வேலை..!! டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Advertisement