For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்….! இளைஞரின் உயிரை பறித்த உறவினர்கள்…

04:07 PM May 05, 2024 IST | shyamala
மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்…   இளைஞரின் உயிரை பறித்த உறவினர்கள்…
Advertisement

உ.பி.யில் பாம்பு கடித்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மூடநம்பிக்கையால் இளைஞரின் உயிரை உறவினர்கள் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக கடந்த 26ம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோகித் வந்துள்ளார். அப்போது, வாக்களித்த பிறகு வயல்வெளிகளில் சென்றபோது, மோகித்தை பாம்பு கடித்துள்ளது.

உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.  அதை தொடர்ந்து, சிலர் மருத்துவத்தால் சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற கூறியிருக்கின்றனர். அந்த மூடநம்பிக்கையை நம்பிய மோகித் பெற்றோர், கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர்.

ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பின் விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் உறவினர்கள் நிதியிலேயே இளைஞரின் உடலை போட்டு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு! நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்!

Tags :
Advertisement