MSC ARIES: உச்சகட்ட பதற்றம்.!! 17 இந்தியர்களுடன் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பல்.!! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை.!!
போர்ச்சுக்கல் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஹார்முஸ் வளைகுடா பகுதியில் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது. இந்தக் கப்பலில் பணியாற்றிய 25 நபர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்தக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் வளைகுடாவில் ஈரான் கையகப்படுத்திய MSC ARIES என்ற கப்பல் இந்தியாவின் மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி இந்த கப்பல் மும்பையை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எம்எஸ்சி ஏரீஸ்' என்ற சரக்குக் கப்பல் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். கப்பலில் 17 இந்தியர்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்திய நாட்டினரின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, தெஹ்ரான் மற்றும் டெல்லியில் உள்ள இராஜதந்திர சேனல்கள் மூலம் ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்," என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி கிடைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.