முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

MS Dhoni | ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக எம்.எஸ் தோனி நிகழ்த்திய சாதனை.!!

01:58 PM Apr 29, 2024 IST | Mohisha
Advertisement

CSK vs SRH: 2024 ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) மேலும் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.

Advertisement

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்எச்(CSK vs SRH)அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 98 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரர் டெரில் மிச்சல் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. சென்னை அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 3 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

சிஎஸ்கே அணியின் இந்த வெற்றியின் மூலம் எம்எஸ் தோனி மீண்டும் ஒரு சாதனை புரிந்திருக்கிறார். நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வெற்றி ஐபிஎல் தொடர்களில் அந்த அணிக்கு கிடைக்கும் 150 வது வெற்றியாகும். இதன் மூலம் ஐபிஎல் போட்டி தொடர்களில் 150 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 133 வெற்றிகள் உடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் 125 வெற்றிகள் உடன் நான்காம் இடத்தில் உள்ளார். சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 122 வெற்றிகள் உடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

Read More: BREAKING: முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை...!

Advertisement
Next Article