For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜிம்முக்கு வரும் பெண்களிடம் உடலமைப்பை காட்டி பணம் பறித்த மிஸ்டர் வேர்ல்ட்..!! ஜாமீனில் வெளிவந்தும் அடங்காத சேட்டை..!!

02:33 PM Mar 23, 2024 IST | 1newsnationuser6
ஜிம்முக்கு வரும் பெண்களிடம் உடலமைப்பை காட்டி பணம் பறித்த மிஸ்டர் வேர்ல்ட்     ஜாமீனில் வெளிவந்தும் அடங்காத சேட்டை
Advertisement

மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமான மணிகண்டன் சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021இல் மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி பண மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆணழகன் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

குறிப்பாக, மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் பெண்களையும், இன்ஸ்டாகிராமிலும் உடலமைப்பைக் காட்டி மயக்கி பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக சந்தியா குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, சிறையில் இருந்த தனது கணவர் மணிகண்டனை கவிதா ஜாமீனில் எடுத்தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது மனைவி கவிதாவுடன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கொஞ்சம் நாள் அடங்கி இருந்தவர் மீண்டும் வேலைகளை காட்ட ஆரம்பித்தார்.

சமீபத்தில் மனைவி கவிதா யூடியூப்பில் கணவர் மணிகண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்த போது தனது மனைவி என வேறொரு பெண்ணை மணிகண்டன் காண்பித்ததால் கவிதா அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கவிதா கணவர் மணிகண்டனிடம் கேட்டபோது மிரட்டியதால் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கவிதா புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், மணிகண்டன் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கவிதா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கடிதம் எழுதிவிட்டு கடந்த மாதம் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா மணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தன்னை விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பெண்களை ஏமாற்றிய புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் மீது போலீசார் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Read More : Ration | தமிழக ரேஷன் கடைகளில் UPI பரிவர்த்தனை இருக்கா..? இல்லையா..? குழப்பத்தில் பொதுமக்கள்..!!

Advertisement