For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

09:13 AM Jan 06, 2024 IST | 1newsnationuser2
எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Advertisement

எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் (சி.ஐ.ஐ) இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Advertisement

இந்திய ரயில்வே மற்றும் சி.ஐ.ஐ தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சைலேந்திர சிங், சிஐஐ-யின் துணை தலைமை இயக்குநர் சீமா அரோரா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்திய ரயில்வே, இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் முக்கிய பங்களிப்பு செய்வதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டது. இந்திய ரயில்வே, 2030 ஆம் ஆண்டிற்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு" இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வேயில் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் நிலையங்கள், உற்பத்திப் பிரிவுகள், பெரிய பட்டறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன, இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் தடங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு பசுமை முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயில் பசுமை முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எளிதாக்குவதற்கும் சிஐஐ ஜூலை 2016 முதல் இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. அது காலாவதியான பின்னர் மேலும் 03 ஆண்டுகளுக்கு 2019 ஆம் ஆண்டில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement