முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொது விநியோக துறையும், இந்திய உணவுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

MoU between Department of Public Distribution and Food Corporation of India
08:30 AM Sep 14, 2024 IST | Vignesh
Advertisement

உணவு தானிய கொள்முதல், விநியோக செயல்திறனை மேம்படுத்த உணவு - பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து.

Advertisement

உணவு தானிய கொள்முதல், விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு- பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் 2024-25 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளது . உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட செயல்திறன் வரையறைகள், பொறுப்புடைமை நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளின் செயல்திறன் தர நிர்ணயம், கிடங்குகளின் திறன் பயன்பாடு, செயல்பாட்டு இழப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், நவீனமயமாக்கல், கிடங்குகளைத் தானியங்கி மயமாக்கல் போன்ற செயல்திறன் செயல்பாடுகளும் இதில் அடங்கும்.இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் உணவு மானிய நிதிகள் மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

Tags :
central govtPublic Distributionrationration shop
Advertisement
Next Article