முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாகன ஓட்டிகளே... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறை...! சிக்கினால் ரூ.25,000 வரை அபராதம்...!

05:45 AM Jun 01, 2024 IST | Vignesh
Advertisement

18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் விதிக்கும் விதிகள் அமலுக்கு வந்தது.

Advertisement

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

அதிவேகத்துக்கான அபராதத்தை பொருத்தவரை ரூ.1,000 - ரூ.2,000 என்ற வகையில் இருக்கும். 18 வயதுக்குட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோருக்கு 3 மாதம் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனத்தின் பதிவுசான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

விண்ணப்பிக்கும் நடைமுறையில் பெரியளவில் மாற்றமில்லை. parivahan.gov.inஎன்ற இணையதளத்தில் வழக்கம்போல் விண்ணப்பிக்க வேண்டும். அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழக்கும் நபர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியரை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
bike ridedriving licenceLicense cancelRTO
Advertisement
Next Article