வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரத்தில் அபராதம் விதிக்க கூடாது...! காவல்துறை அதிரடி உத்தரவு...!
இரவு நேரங்களில் ஒரு வாகன ஒட்டி இருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை கமிஷனர் கூறியதாவது; ஓட்டுநர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அபராதம் விதிப்பதற்கு முன், மூத்த அதிகாரிகளின் அனுமதி அவசியம் என, துணை போலீஸ் கமிஷனர் வீரேந்திர விஜ், மே 28 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், “போக்குவரத்து ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இரவில் எந்த வாகனத்தையும் நிறுத்தக் கூடாது, அபராதம் விதித்த சலான் வழங்கக்கூடாது. மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒரு ஓட்டுநருக்குச் சலான் வழங்குவது மிகவும் அவசியமானால், அந்தச் சூழ்நிலையில், அந்த வாகனத்தின் சலான், சம்பந்தப்பட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்ட அதிகாரி அல்லது அண்டர் கையொப்பமிடப்பட்டவரின் கவனத்திற்குக் கொண்டு வந்து அனுமதி பெற்ற பின்னரே விதிகளின்படி வழங்கப்பட வேண்டும்.
இந்த விதிகளை கடைபிடிக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "ஆணைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவலர் மீது சட்டப்படி கடுமையான துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் விழிப்புடன் இருந்து பெரும் விபத்துகளை தடுக்க வேண்டும். வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக போக்குவரத்து போலீசார் இரவு நேர பிரச்சாரம் செய்கிறார்கள். நகரத்தில் பல பொறுப்பற்ற ஓட்டுநர்கள் விதிகளை மீறி இரவில் ஆபத்தான பயணத்தில் ஈடுபடுகின்றனர் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.