For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாய்மார்களே..!! குழந்தையை குளிப்பாட்டியதும் பவுடர் போடுறீங்களா..? இனி அப்படி பண்ணாதீங்க..!! புற்றுநோய் ஆபத்து..!!

It is said that applying powder to a newborn baby can cause respiratory problems by getting into the lungs and even causing cancer.
11:54 AM Nov 20, 2024 IST | Chella
தாய்மார்களே     குழந்தையை குளிப்பாட்டியதும் பவுடர் போடுறீங்களா    இனி அப்படி பண்ணாதீங்க     புற்றுநோய் ஆபத்து
Advertisement

பிறந்த குழந்தைக்கு பவுடர் போடுவதால் நுரையீரலுக்கு சென்று சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம்.

பிறக்கும் குழந்தை இயல்பாகவே அழகாக தான் இருப்பார்கள். குளிப்பாட்டிய பிறகு அவர்களை சுத்தமாக துடைத்து பவுடர் போடுவது இயல்பான ஒன்று. உண்மையில் குழந்தைக்கு பவுடர் அவசியமில்லை என்பதுதான் உண்மை. குழந்தைகளுக்கு அதிகமாக பவுடரைப் பயன்படுத்தும் போது அதன் நுண்துகள்கள் சுவாசப் பாதை வழியாக செல்கிறது. இதனால் நுரையீரலுக்கு சென்று சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது.குழந்தைக்கான பவுடர் தயாரிப்பதில் மெக்னீசியம் சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் கூறுகள் உள்ளது.

இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் ஈர்ப்பதற்கு பயன்படும். டயப்பர் ஏற்படும் சர்ம பிரச்சனையை தடுக்க இந்த பவுடர் பயன்படுகிறது. குழந்தைகளை அதிக டயப்பரில் நாம் வைத்திருக்கும் போது அதனை எடுத்துவிட்டு கிளீன் செய்தபின்னர் பவுடரை போடுவது நல்லது. குழந்தைகளுக்கு கழுத்து பகுதியில் முகத்தில் அதிக அளவில் பவுடரைப் போடுவது தவறானது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தை உண்டாக்கும். பவுடரை நீங்கள் வாங்கி பயன்படுத்துகிறீர்கள் என்றால் தரமான பவுடரை வாங்குங்கள். இது குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். பவுடரைப் பயன்படுத்தும் போது மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி குழந்தையின் கண், மூக்கு, வாய் பகுதியில் படாதவாறு குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.

Read More : இந்த அறிகுறிகள் இருக்கா..? குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்..!! அசால்ட்டா விட்டா அவ்வளவு தான்..!!

Tags :
Advertisement