முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"குடிச்சி வாழ்க்கையை கெடுத்துக்காதப்பா…"! தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! பதபதைக்க வைக்கும் பின்னணி.!

01:44 PM Nov 25, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கடலூர் மாவட்டத்தில் சாராயம் குடிக்க பணம் கொடுக்காததால் தாய்யை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர்களது மகன் சேவாக்(21) சென்னை மற்றும் திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்த இவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.

மேலும் மது குடிப்பதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது குடிக்கப் பணம் கேட்டு தனது தாயை தொந்தரவு செய்து இருக்கிறார் சேவாக். இதனைத் தொடர்ந்து அவரது தாய் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கட்டையால் தாக்கியிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே தாய் கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தாயின் உடலை வீட்டில் புதைத்து இருக்கிறார்.

இந்நிலையில் வீடு திரும்பிய உறவினர்கள் கஸ்தூரி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் கஸ்தூரியின் மூத்த மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அவரை வழிமறித்த சேவாக் நடந்து உண்மையை தனது அக்காவிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரும் உறவினர்களும் சேவாக்கை வீட்டில் கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த கஸ்தூரியின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மது குடிக்க பணம் கொடுக்காததால் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
cuddaloremothermurderPolicearrestson
Advertisement
Next Article