முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“நீ இருக்க நிறத்துக்கு, என் மகள் உன்கூட நடிக்கனுமா?” பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய நடிகையின் தாய்..

mother-of-an-actress-mocked-a-famous-actor-for-his-colour
04:52 PM Nov 12, 2024 IST | Saranya
Advertisement

வெள்ளித்திரையில் வெற்றி நாயகி என்றால் அது ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. 1972ல் தமிழக அரசால் "கலைமாமணி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான "ஃபிலிம் ஃபேர் விருது" "பட்டிக்காடா பட்டணமா" திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது. "சூரியகாந்தி" திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான "ஃபிலிம் ஃபேர் விருது" இவருக்கு கிடைக்கப் பெற்றார். 2004 ஆம் ஆண்டு "உமன் பாலிடீசியன் ஆஃப் த டெக்கேட்" என்ற விருதினை ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் லண்டன் இவருக்கு வழங்கி கௌரவித்தது. இப்படி சினிமா, அரசியல் என்று இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கியவர் தான் ஜெயலலிதா அவர்கள்.

Advertisement

தெலுங்கு திரையுலகின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் என்றால் சோபன் பாபு தான். சோபன் பாபு அவர்கள் ஒரு சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நாடகங்கள் பலவற்றில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால் சினிமா துறையில் நுழைந்தவர். ஆராம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்த இவர், தனது திறமையை நிரூபித்து ஹீரோவாக உயர்ந்தார். தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன கிருஷ்ணா அவர்களுடன் சோபன்பாபு இணைந்து நடித்த முதல் படம் தான் " குடாச்சாரி 116 ". இந்த படத்தில் ஷோபன் பாபு அவர்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்தனர். ஆனால் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, உன்னுடைய நிறத்திற்கு என் மகள் உன்னுடன் நடிக்க வேண்டுமா? ஏழையாக இருந்து சினிமா துறையில் நடிக்க வந்துள்ள ஒருவருடன் என் மகள் நடிக்க வேண்டுமா ? என கோபத்தோடு பேசி அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் கதாநாயகனை நீங்கள் மாற்ற வில்லை என்றால், என் மகள் உங்கள் படத்தில் நடிக்க மாட்டார் என்று ஜெயலலிதாவின் தாயார் கூறியுள்ளார். இதனால் தான் சோபன்பாபுவை நீக்கிவிட்டு அவருடைய இடத்திற்கு கிருஷ்ணாவை வைத்து படம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அவமானத்திற்கு பின்னர் சோபன்பாபு சினிமா துறையில் உச்சத்திற்கு சென்று விட்டார். அப்போது ஜெயலலிதா சோபன்பாபு உடன் நடிக்க சம்மதித்துள்ளார். ஏற்கனவே சோபன் பாபுவிற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது என்றும், தன்னை அவமானப்படுத்திய வரையே தன் பின்னால் வர வைத்து சோபன்பாபு பழிவாங்கியதாகவும் மூத்த பத்திரிகையாளர் இம்மண்டி ராமராவ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Read more: காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன்; திருவண்ணாமலையை உலுக்கிய கொடூர சம்பவம்!!!

Tags :
affairjayalalithapoliticssoban babu
Advertisement
Next Article