மாமனாருடன் உல்லாசமாக இருந்த மருமகள்; நேரில் பார்த்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்!!!
உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான கீதா தேவி. இவருக்கு குர்கு யாதவ் என்ற கணவரும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கீதா தேவி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பியுள்ளார். அப்போது மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன கீதா தேவி, இது குறித்து தனது மகன் தீபக் மற்றும் அக்கம் பக்கதினரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனாரும், மருமகளும், கீதா தேவியை கொலை செய்ய
முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, கீதா தேவியின் மருமகள், தனது மாமியாரின் தலையில் செங்கல் மற்றும் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கீதா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்தக் கொலையை மறைக்க, அவர் கீதா தேவியின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தனது மாமியாரை காணவில்லை என நாடகமாடியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் தனது மாமியார் சென்றதாக அவரது கணவர் தீபகிடம் கூறியுள்ளார்.
இதனிடையே, கீதா தேவியின் கணவர் குர்கு யாதவ், தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவறை தொட்டியில் இருந்து கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனையின் அறிக்கையின் படி, அவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் மாமனார், மருமகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: HMPV வைரஸ் பரிசோதனை..!! இந்தியாவில் எவ்வளவு செலவாகும் தெரியுமா.