பாராளுமன்றத்தில் மாமியார்..!! படுதோல்வியில் மருமகன்..!! உடைந்துபோன இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பம்..!!
பிரிட்டன் நாட்டின் பொதுத்தேர்தல் முடிவுகள் இன்போசிஸ் குடும்பத்தில் பெரும் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரே வாரத்தில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பம் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.
பிரிட்டன் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் பல அதிரடிகளைக் கிளப்பி வரும் நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. கெய்ர் ஸ்டார்மர்-ன் லேபர் கட்சி 650-க்கு 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புதிய பிரதமராகத் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கெய்ர் ஸ்டார்மரை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 113 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ரிஷி சுனக் போட்டியிட்ட மேற்கு இங்கிலாந்தில் Richmond மற்றும் Northallerton தொகுதியில் 47.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தார். இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயாண மூர்த்தியின் மருமகன் தான் ரிஷி சுனக். இவருடைய தோல்வி நாராயண மூர்த்தி குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷி சுனக் மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்று வரை இன்போசிஸ் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ளார்.
இந்த வாரத்தின் துவக்கத்தில் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினராக மார்ச் 14ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாகப் பாராளுமன்றத்தில் பேசினார். இந்த நிகழ்வை நாராயாண மூர்த்தியின் குடும்பம் மொத்தமும் கொண்டாடியது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாளிலேயே நாராயண மூர்த்தி குடும்பத்தின் மொத்த கொண்டாட்டமும் சோகமாக மாறியது. வியாழக்கிழமை மாலையில் வெளியான எக்சிட் போல் முடிவுகளும், வெள்ளிக்கிழமை காலையில் வெளியான தேர்தல் முடிவுகளில் மருமகன் ரிஷி சுனத் பெரும் தோல்வியைச் சந்தித்தார்.
இப்படி ஒரு வாரத்தில் மொத்த கதையும் நாராயண மூர்த்தி குடும்பத்தில் மாறியுள்ளது. மேலும், பிரிட்டன் அரசியல் களத்தைப் பார்க்கும் போதும் அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சியும், லேபர் கட்சியும் மாறி மாறி 10-15 வருடங்களில் ஆட்சி செய்து வருகிறது. இப்படிப் பார்க்கும் போது 14 வருடத்திற்குப் பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழக்கும் போதும் இதற்குக் காரணமாக ரிஷி சுனக் உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளது மட்டுமின்றி, 3 பிரதமர்களை நியமித்துள்ளது. இதில், லிஸ் ட்ரஸ்-ன் சில மாத ஆட்சி காலம் மிகவும் மோசமாக இருந்தது. இதற்கு முன்பு இருந்த போரீஸ் ஜான்சன் பல பிரச்சனையில் சிக்கியிருந்தார். ரிஷி சுனக் ஆட்சிக் காலத்தில் தான் விமர்சனங்கள் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சி மீதான நம்பிக்கையை இழந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.