முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்க சாப்பிடுறது வாழைப்பழம் தானா.? இந்த வகை வாழைப்பழம் உங்கள் ஆண்மையை பறிக்கும்.! திடுக்கிடும் உண்மை.!

05:35 AM Dec 14, 2023 IST | 1newsnationuser4
Advertisement

வாழைப்பழம் அனைத்து மக்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொட்டாசியம், மக்னீசியம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் அன்றாட உணவு வழக்கத்தில் தினமும் எடுத்துக் கொள்ளும் ஒரு பழமாகும். இது நாடு முழுவதும் இயற்கையான முறையில் பல வகைகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ஏத்தன், பூவாழை என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிற பொருள்களில் இருக்கும் கலப்படத்தைப் போல வாழைப்பழத்திலும் கலப்படங்கள் வர தொடங்கி விட்டது.

Advertisement

ஆரம்ப காலங்களில் நகர்ப்புறங்களில் மட்டும் சந்தைக்கு வந்த இந்த கலப்பட ரக வாழைப்பழங்கள் தற்போது கிராமப்புறங்களிலும் விற்பனைக்கு வர தொடங்கிவிட்டது. பச்சை மற்றும் மஞ்சள் கலந்து பளபளப்பாக இருக்கும் மோரிஸ் பழங்கள் தான் வாழைப்பழங்களில் கலப்பட வகை பழங்களாகும். பெங்களூர் வாழைப்பழம் என அறியப்பட்ட இது திசு வளர்ப்பு முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்களாகும். தற்போது நமது பாரம்பரிய வாழைப்பழங்களின் சந்தையை முறியடித்து இந்த வகை வாழைப்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மான்சாண்டோ என்ற பன்னாட்டு நிறுவனம்தான் இந்த வகை பழங்களை காப்பிரைட்ஸ் முறையில் உலகெங்கிலும் விற்பனை செய்து வருகிறது. இவற்றிடமிருந்து இந்த வகை பழங்களை இறக்குமதி செய்து நம் நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த வகை வாழைப்பழங்களில் கரப்பான் பூச்சி மற்றும் காட்டுப்பூச்சியின் ஜீன்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே இந்த பழங்கள் நீண்ட நாட்கள் கேட்டு போகாமல் இருக்கிறது.

இந்த மோரிஸ் பழங்களை சாப்பிட்டு வருவதால் ஆஸ்துமா, அலர்ஜி, தோல் பிரச்சனைகள் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கும் படியும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற நச்சுத்தன்மை உடைய பழங்களை நம் அரசின் வாழைப்பழ ஆராய்ச்சி நிறுவனமே திருச்சியில் உற்பத்தி செய்கிறது என்பது தான் கொடுமை.

Tags :
Health Complicationshealth tipsMorris BananaOrganic Farmingside effects
Advertisement
Next Article