For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மார்ஃபிங் புகைப்பட விவகாரம்| கர்நாடகத் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

04:13 PM Feb 07, 2024 IST | 1newsnationuser7
மார்ஃபிங் புகைப்பட விவகாரம்  கர்நாடகத் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Advertisement

பாஜக தலைவர்களின் போராட்டத்தின் மார்பிங் படத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு நகர காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி சமீபத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாங்களும் கர சீவகர்கள் என்று எழுதிய பாதகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாரதிய ஜனதா கட்சியினர் பயன்படுத்திய பாதகைகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டது தொடர்பான வாக்குமூலம் அளித்தது போல் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பினர். இது போன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை கர்நாடக துணை முதல்வரின் சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டது மேலும் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் பகிர்ந்து இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பிரிவு மாநில கன்வீனர் யோகேந்திர ஹோடகட்டா,"சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்க தவறான ஆவணத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப ஊடகப்பிரிவு தலைவர் ஆகியோர் மீது எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிஆர்பிசியின் 156(3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Advertisement