முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உடல் எடையை குறைக்க விடிய விடிய உடற்பயிற்சி..!! பட்டினியுடன் உடலில் இருந்து ரத்தத்தையும் வெளியேற்றிய வினேஷ் போகத்..!!

Indian Olympic wrestler Vinesh Phogat has been disqualified for being overweight.
05:05 PM Aug 07, 2024 IST | Chella
Advertisement

ஒலிம்பிக் மல்யுத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், எடை கூடி இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன விதிப்படி மல்யுத்தத்தில் ஒவ்வொரு எடைப்பிரிவிற்கும் இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தப்படும். அந்த 2 நாட்களும் வீரர், வீராங்கனைகளின் எடை சோதனையிடப்படும். அதன்படி, முதல் நாள் எடை சோதனையில் வினேஷ் தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நாளில், வினேஷ் போகத்தின் எடையை சோதித்த போது, 50 கிலோவை தாண்டி, 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

முதல் நாள் எடை சோதனை 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் நிலையில், எத்தனை முறை வேண்டுமானாலும் வீரர்கள் தங்கள் எடையை சோதனை செய்ய முறையிடலாம். ஆனால், இறுதி நாளில் 15 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதில் தோல்வி அடைந்த வினேஷ், எடை சோதனைக்கு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவக் குழுவினர் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

முதல் நாள் எடை சோதனையில் வினேஷ் தகுதி பெற்றாலும், பிறகு அதே நாள் இரவில் தனிப்பட்ட முறையில் சோதித்த போது, 2 கிலோ எடை கூடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் உணவை தவிர்த்துவிட்டு, விடிய விடிய கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் வினேஷ் போகத். எடை குறைப்புக்காக முடியை வெட்டிக் கொண்டதுடன், உடலில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவு ரத்தத்தையும் வெளியேற்றியுள்ளார்.

இது போன்ற கடினமான முயற்சிகளால் 1 கிலோ 850 கிராம் வரை எடையை குறைத்த வினேஷ் போகத்தால், எஞ்சிய 100 கிராம் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் அவரது ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு தகர்ந்தது.

Read More : நீங்கள் யாரென்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரிய வேண்டுமா..? பிணத்தை எரிக்காமலும், புதைக்காமலும் பாதுகாக்கலாம்..!!

Tags :
ஒலிம்பிக்வினேஷ் போகத்
Advertisement
Next Article