வியாதியே இல்லாம ஆரோக்கியமாக வாழனுமா? அப்போ தினமும் காலை உணவுடன் இந்த சூப் குடிங்க.. டாக்டர் அட்வைஸ்..
புது பெயர்களுடன் பரவி வரும் பல வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க, நமது ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது கட்டாயம். நாம் குழந்தைகளுக்கு எதை கொடுக்கிறோமோ இல்லையோ, ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது மட்டு இல்லாமல், நாமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் நமது பிள்ளைகளை நாம் கவனித்துக் கொள்ள முடியும். அந்த வகையில், ஆரோக்கியத்தை பராமரிக்க கட்டாயம் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விலை மலிவாக கிடைக்கும் கீரைகளில் இருக்கும் சத்துக்கள், நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் காய்களில் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு கீரைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. உடலுக்கு மிக முக்கியமான இரும்புச்சத்து, மற்ற உணவுகளை விட கீரைகளில் தான் அதிகம். அதிலும் குறிப்பாக, முருங்கை கீரையில் மற்ற கீரைகளை விடவும் அதிக சத்துக்கள் உள்ளது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கை கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் காலை உணவு சாப்பிடும் போது முருங்கை கீரை சூப் குடிக்கலாம். இதனால், ரத்த அழுத்தம் சீராவது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமும் அதிகரிக்கும். பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மையில், கேரட்டை விட பலாயிரம் மடங்கு கண்ணுக்கு நன்மை தருவது முருங்கை கீரை தான். இந்த கீரையின் சுவை பலருக்கு பிடிக்காது. இதற்கு நீங்கள், கீரையை வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றுடன் வேக வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து விடுங்கள்.
இப்போது மற்ற பொருள்களை மிக்ஸியில் அறைத்து, நாம் எடுத்து வைத்துள்ள தண்ணீரில் சேர்த்து சூப்பாக குடிக்கலாம். இதனுடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.