அட இது தெரியாம போச்சே!! சீனியர் சிட்டிசன்களுக்கான 'வயோஸ்ரீ யோஜனா திட்டம்' பற்றி தெரியுமா?
வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் 60 வயதை தொட்டவர்கள் சீனியர் சீட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் 80 வயதை தொட்டவர்கள் மிகவும் சீனியர் சிட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகள், திட்டங்கள் இருக்கின்றன.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் பெரும் முதியவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வயது காரணமாக ஏற்பட்ட ஊனம், உடல் நலம் அல்லது மன நலம் குன்றுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சக்கர நாற்காலி (Wheelchair), சிலிகான் ஃபோம் குஷன் (Silicon Foam Cushion), கைத்தடி (Walking Sticks), முழங்கை ஊன்றுகோல் (Elbow crutches), காது கேளாதவர்களுக்கான கருவி (Hearing aid) உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஆலோச மாநிலத்தில் 96207 பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2,195 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
Read more | வெயில் தாக்கம்!. ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் 10 பேர் மரணம்!.