முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்.. ஆதார் இணைப்பதால் கூடுதல் கட்டணமா?

More than one power connection..Additional charges due to Aadhaar linking?
04:27 PM Jan 21, 2025 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்சார வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

Advertisement

சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கலாமா என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் எழுந்திருக்கும்.

இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், நுகர்வோருக்கு மின்சார வாரியம் வழங்கிவரும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இதில் பிரச்சனை ஏதும் கிடையாது. அதேபோல, வீடுகளை வாடகைக்கு விடப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்சார வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன”. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Read more ; 8வது ஊதியக் குழு.. அடிப்படை சம்பளம் ரூ.51,000 ஆக உயர்வு.. அரசு ஊழியர்கள் எப்போது பெறுவார்கள்..?

Tags :
Aadhaar linkingpower connection
Advertisement
Next Article