பற்றி எரியும் மணிப்பூர்.. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்..!! - 40க்கும் மேற்பட்டோர் காயம்..
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது மணிப்பூர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான சூழலில், மணிப்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் தலைநகர் இம்பால் சாலையில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தினர். விமான நிலைய சாலை அருகே நடந்த இந்த பேரணி நடைபெற்று வந்தபோது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும் மாண்வர்கள் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மைகளை எரித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் இன்று(செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரு நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; இந்தியாவில் பரவிய Mpox.. கொடிய நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி? மருத்துவர் தரும் அட்வைஸ்..!!