இந்திய ரயில்வேயில் வேலை.. ரூ.25,000 சம்பளம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
இந்திய ரயில்வே பணிக்கான குரூப் டி பிரிவில் 32,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்கள் : ரயில்வே துறையில் டிராபிக் பாயிண்ட்ஸ்மேன், டிராக் மெயிண்டனர், மெக்கானிகல் அஸிஸ்டண்ட் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 35,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி மற்றும் வயது தகுதி : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பளம் : மாத ஊதியமாக ரூ. 25,380 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் : ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.
Read more : இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலி..!!