சென்னையில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் தயார்...!
தமிழ்நாடு காவல் நிலையங்கள் வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 3 நாட்களில்விலக உள்ளது. இந்தநிலை யில், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு, வடகிழக்குதிசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், தென்னிந்திய பகுதி களில் வடகிழக்கு பருவமழை வரும் 15 அல்லது 16-ம் தேதி தொடங்கக் கூடும். இந்த நிலையில் சென்னை மாநகரில் 50 இடங்களில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு காவல் நிலையங்கள் வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்
சுகாதார துறை குழு
பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதியை உறுதி செய்ய வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பேரிடர் நிவாரண முகாம்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தி இருக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சுகாதார மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் கனமழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.