For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஹஜ் புனித யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்டோர் மரணம்!!"  இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

Increased exposure to heat during summer is believed to be responsible for the recent deaths
02:02 PM Jun 21, 2024 IST | Mari Thangam
 ஹஜ் புனித யாத்திரை சென்ற 1000 க்கும் மேற்பட்டோர் மரணம்     இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன
Advertisement

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் எனும் தியாகத் திருநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 14ம் தேதி முதல் மெக்காவில் புனித யாத்திரை தொடங்கியது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 1.75 பேர் சவுதி அரேபியா சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த 16ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Advertisement

இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்ப சலனம் காரணமாக, நூற்றுக் கணக்கான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை மொத்தம் 900க்கும் அதிகமான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 1400க்கும் மேற்பட்ட எகிப்து நாட்டினரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில். மிக அதிக வெப்பநிலை மற்றும் தங்குமிடம் அல்லது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இவர்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் கடந்த வார இறுதியில் தொடங்கிய வருடாந்திர நிகழ்வின் போது அங்கு வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் (125 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது.

இது குறித்து சவுதி அரேபிய சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வெப்பச் சோர்வு அடிப்படையில், 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறப்பு பற்றிய தகவல்கள் வெளிவருவதற்கு முன்பே இது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை.

ஏ.எஃர்.பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,கடந்த சில நாட்களாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் நாடுகள் வழியாக இறப்பு எண்ணிக்கையை கணக்கிடுகிறது. அதன்படி இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை,1000-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எகிப்து, இந்தோனேசியா, செனகல், ஜோர்டான், ஈரான், ஈராக், இந்தியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பலரும் இறந்துவிட்டதாக அந்நாடுகளின் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த ஆண்டுகளில், சவூதி அதிகாரிகள் ஹச் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வெப்பநிலையின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும், சமீபத்திய இறப்புகளில் பெரும்பாலானவை அதிக வெப்பநிலை காரணமாக நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஹஜ் பயணம் செய்ய, யாத்ரீகர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இட வசதி இருப்பதை விட அதிகமான முஸ்லிம்கள் வர விரும்புவதால், சவுதி அரேபியா ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீட்டு முறையை நடத்துகிறது. அதேபோல் கடந்த காலங்களில், கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் ஆகியவை கடுமையான பிரச்சனைகளாக இருந்தன. மேலும் சில பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போதுமான அளவு வதிகள், கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க தங்குமிடம் ஏற்பாடு செய்ய தவறிவிட்டன என்று சவுதி அரேபிய அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டின் அதிகரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அதே சமயம் தற்போது 171,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யாமல் ஹச் யாத்திரை மேற்கொண்டதாகவும், ஹஜ் தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக இருப்பது தெரியவந்ததாக சவுதி பொது பாதுகாப்பு இயக்குனர் முகமது பின் அப்துல்லா அல்-பாஸ்மி கூறியிருந்தார். சட்டவிரோதமாக ஹஜ் செய்யும் எவரையும் கைது செய்ய வேண்டும் என்று சவுதி அரேபிய பாதுகாப்பு சேவைகள் முன்பு பிரச்சாரம் செய்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட யாத்ரீகளுக்கு, ஏர் கண்டிஷனிங், தண்ணீர், நிழல், மற்றும் பனிமூட்டம் அல்லது குளிரூட்டும் மையங்கள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் நிலையில், பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் அதே வகையான வசதிகளை அணுக முடியாது. இதுவே உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read more ; கள்ளச்சாராய விற்பனை தடுக்க என்ன செய்தீர்கள்? தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

Tags :
Advertisement