வினாத்தாள் கசிந்த மையங்களில் 100-க்கும் மேற்பட்டோர் 600க்கு மேல் மதிப்பெண்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
சர்ச்சைக்குள்ளான நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. முன்னதாக இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வு தாள் கசிவு, தேர்வுகளை நடத்துவதில் முறைகேடு உள்ளிட்ட புகார் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி முன்பு வெளியான தேர்வு முடிவுக்கு பதிலாக இந்த முறையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் மையங்களில் 100-க்கும் மேற்பட்டோர் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜார்கண்ட் ஹசாரிபாக் மையத்தில் 22 பேரும், ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மையத்தில் 45 பேரும், ராஜஸ்தான் சிகர் மையத்தில் 83 பேர் 600-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Read More : வெறும் ரூ.151 முதலீடு செய்தால் போதும்..!! லட்சங்களில் சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?