அதிக வட்டி.. அதிக வருமானம்..!! இந்த 5 திட்டங்களை மறந்துறாதீங்க..!! பாதுகாப்பானதும் கூட..!!
இன்றைய வாழ்க்கை முறையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். நாம் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே செலவு செய்வதை தவிர்த்து, அதை சரியான முறையில் சேமிக்க வேண்டும். அந்த வகையில், சிறந்த சேமிப்பு முறைகள் குறித்து முதலில் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அதிக வட்டியுடன் வரக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மிகவும் முக்கியம். குறிப்பாக, அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் பல வகையில் நன்மை தரும். இந்த திட்டங்கள் வரிச் சேமிப்புக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பதிவில் பலருக்கும் உதவ கூடிய அதிக வருமானத்தை தர கூடிய 5 முதலீட்டு திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) :
இது அரசாங்க ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும். எனவே, இதில் எந்தவித பயமும் இன்றி சேமிப்பை தொடங்கலாம். இது நீண்ட கால சேமிப்பிற்கு ஏற்ற திட்டமாகும். இதில் தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவிகிதம் ஆக உள்ளது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக ரூ. 1,000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டுத் தொகைக்கான வரம்பு எதுவும் இல்லை.
பொது வருங்கால வைப்பு நிதி (Pubilc Provident Fund) :
7.1 சதவிகிதம் நிலையான வட்டி விகிதத்தை கொண்ட இந்த திட்டமானது பல எளிய மக்களுக்கும் உதவ கூடிய திட்டமாகும். இது 15 வருட முதலீட்டு காலத்தை வழங்குகிறது. ஒருவர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடு தொகையாக ரூ.500 செலுத்தி தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate ) :
பெண் முதலீட்டாளர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டமாகும். இதில் குறைந்தபட்சமாக ரூ. 1000 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். இதில், அதிகபட்ச முதலீட்டு தொகைக்கான வரம்பு என்று எதுவும் இல்லை. இந்த 2 ஆண்டு கால திட்டத்தில் நிலையான வட்டியாக 7.5 சதவீத வட்டியை பெறலாம். இதை காலாண்டுக்கு ஒருமுறையாகவும், அல்லது பகுதியளவு திரும்பப் பெறும் வசதிகளுடன் உள்ளது.
தபால் நிலைய ஃபிக்ஸ்டு டெபாசிட் (Post Office Fix Deposits) :
இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பானது. உங்கள் பணத்தை குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரை தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் வட்டியானது வங்கிகளை விடவும் அதிகமாக உள்ளது. எனவே, ஒருவர் சிறப்பான சேமிப்பு முதலீட்டு திட்டத்தை தேடுகிறார் என்றால் அவருக்கு இந்த தபால் நிலைய ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டம் மிகவும் உதவும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) :
இந்தத் திட்டம் அதிக பயன்களை தருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். இத்திட்டம் 5.9 வருட முதலீட்டு காலத்தை கொண்டுள்ளது மற்றும் 6.8 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ.100 செலுத்தி இத்திட்டத்தை தொடங்கலாம்.
Read More : மழைக்காலங்களில் உங்கள் வாகனங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!