For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”சந்திரன் உதயம்.. சூரியன் அஸ்தமனம்”..!! குமரியில் இன்று நிகழும் அதிசயம்..!!

02:34 PM Apr 23, 2024 IST | Chella
”சந்திரன் உதயம்   சூரியன் அஸ்தமனம்”     குமரியில் இன்று நிகழும் அதிசயம்
Advertisement

சித்ரா பௌர்ணமி என்பது இந்துகள் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்று. இன்று சிவனுக்கு உகந்த நாளாகவும், இன்றுதான் பூமியில் அனுமன் அவதரித்த நாள் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோக, இன்றைய நாளில்தான் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். விழுப்புரம் அடுத்த கூவாகத்தில் திருவிழா என பல்வேறு இந்து சமய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், இன்றைய சிறப்பு மிகுந்த நாளில் கன்னியாகுமரியில் சந்திரன் உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் என இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

Advertisement

குமரி கடலில் இன்று மாலை 6 மணிக்கு சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும். இந்த 2 காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழும் என்பதுதான் அதிசயம். இந்த அற்புத மற்றும் அபூர்வ காட்சிகளை பார்க்க கன்னியாகுமரி கடலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது. மாலை பொழுதின்போது சூரியன் வழக்கம்போல் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடலில் கடலுக்கு மறையும்.

அப்போது கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் காட்சியளிக்கும். இந்த காட்சிகளை முக்கடல் சங்கமம் கடற்கரை மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் பார்த்து ரசிக்கலாம். சந்திரன் ஏன் ஒரே நேரத்தில் உதயமாவதும் மறைவதும் இல்லை? பூமியின் சுற்றுப்பாதை வேகம் சீராக இல்லாததால் சந்திரன் வெவ்வேறு நேரங்களில் உதயமாகிறது மற்றும் மறைகிறது. முழு நிலவையும் சூரியனையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா?

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. ஆகையால், சூரியனையும், சந்திரனையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இருப்பினும் இது மிகவும் பொதுவானதல்ல. முழு நிலவு மற்றும் சூரியனை ஒரே நேரத்தில் பார்க்க முடியும். ஆனால், இது மிகவும் அரிதானது. இது எப்போதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே நிகழும். சந்திரன் எப்போதும் சூரிய அஸ்தமனத்தில் உதிப்பதில்லை. சந்திரனின் எழுச்சி மற்றும் அமைவு நேரங்கள் அதன் மாதாந்திர சுழற்சி முழுவதும் மாறுபடும்.

இதுவே, நாம் பௌர்ணமி, அமாவாசை என்று அழைக்கிறோம். இது தோராயமாக 29.5 நாட்களுக்கு ஒருமுறை மாறுபடும். புதிதாக உருவாகும் நிலவு எப்பொழுதும் சூரிய உதயத்திற்கு அருகில் உதயமாகும். இதை நாம், பூமியில் இருந்து தெளிவாக பார்க்க முடியும். முதல் காலாண்டில் சந்திரன் நண்பகலில் உதயமாகும். அதனால், முழு நிலவு சூரிய அஸ்தமனத்திற்கு அருகில் உதயமாகுவதாக நமக்கு தோன்றும். அதையே இன்று நாம் கன்னியாகுமரியில் பார்க்கலாம். கடைசி காலாண்டின்போது சந்திரன் நள்ளிரவில் உதயமாகும்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Advertisement