For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம சான்ஸ்..! மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை + பயிற்சி வகுப்பு...!

Monthly stipend of Rs.750 + training course for students
06:15 AM Jul 13, 2024 IST | Vignesh
செம சான்ஸ்    மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ 750 உதவித்தொகை   பயிற்சி வகுப்பு
Advertisement

தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28.06.2024 உடன் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 01.07.2024 முதல் 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது.

தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 16.07.2024 முதல் 31.7.2024 வரை மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும். சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement