சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ்..!! வெறும் ரூ.340 மட்டும்.. எப்படி பெறுவது?
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கணிசமாக உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக உள்ளது. சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் என்கிற அளவில் தான் இருக்கிறது.. இதுபற்றி பலருக்கு தெரிவதில்லை. சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
சுங்கச்சாவடி விதி ; 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.. அதேபோல் 15 ஆண்டுகளை கடந்து காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பதும் மத்திய அரசின் விதியாகும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூடியிருக்க வேண்டும். ஆனால் மாறாக புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருவது தான் வேதனையின் உச்சம்.
புதிய தரமான சாலைகள் அமைக்கப்படும் அதேநேரம் அங்கே எல்லாம் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சுங்கச்சாவடி தான்.. அதேநேரம் முக்கியமான ஒரு விஷயத்தை அறிய வேண்டும்.. ஒரு மாவட்டடத்தில் சுங்கச்சாவடி அமைக்கிறார்கள். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும். அந்த வாகனங்களுக்கு மற்ற வாகனங்களை விட கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும்.
உதாரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கார் ஜீப் வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 70 ரூபாய் என்றால், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு வெறும் 35 ரூபாய் தான் கட்டணம். அதேபோல் பேருந்துகளுக்கு 240 என்றால், உள்ளூர் பேருந்துகளுக்கு 120 தான் கட்டணம் ஆகும். அதாவது வழக்கமான கட்டணத்தை விட பாதி கட்டணம் தான் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாதாந்திர பாஸ் பெறுவது எப்படி ? இந்த சலுகை பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்திற்கு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புக் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் அளிக்க வேண்டும். அதன்பிறகு நீங்கள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் மாதாந்திர பாஸ் கிடைக்கும். இந்த மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் தான்.
Read more ; எப்புட்றா..!! ஆன்லைனில் ஆர்டர் செய்த லேப்டாப் 13 நிமிஷத்தில் டெலிவரி..!! ஷாக் ஆன கஷ்டமர்..