For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.15,000 வருமானம் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை...! திட்டத்தின் முழு விவரம்

Monthly allowance for senior citizens with an income of Rs. 15,000
12:55 PM Jan 26, 2025 IST | Vignesh
ரூ 15 000 வருமானம் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை     திட்டத்தின் முழு விவரம்
Advertisement

மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானம் ரூ.15,000 உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் வயது முதிர்வு தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கு முகாம் முறையில் உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Advertisement

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு மாதந்தோறும் ரூ.200 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 80 வயதை அடையும் போது ஓய்வூதியம் ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது.

தற்சமயம், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்.எஸ்.ஏ.பி) ஒரு பகுதியாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதத்திற்கு ரூ.50/- முதல் ரூ.3,000/- வரை டாப்-அப் தொகையை சேர்க்கின்றன. தற்சமயம், நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.21 கோடியாகும், மேலும் இத்திட்டம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 100% எட்டியுள்ளது. என்.எஸ்.ஏ.பி ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாநில / யூனியன் பிரதேச வரம்பை விட அதிகமான தகுதியான பயனாளிகள் இருந்தால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் சொந்த ஆதாரங்களிலிருந்து ஓய்வூதியத்தை வழங்குகிறது மத்திய அரசு.

Tags :
Advertisement