"அரக்கர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்"!. பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர், நடிகைகள்!
Doctor Rape: கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் 'கற்பழிப்பு மற்றும் கொலையைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை ஜெனிலியா தேஷ்முக்தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெனிலியா தனது X தளத்தில், “அரக்கர்களை தூக்கிலிட வேண்டும்!!! பணியில் இருந்த உயிர்காக்கும் பெண் ஒருவர் கருத்தரங்கு அரங்கில் இந்த பயங்கரத்தை எதிர்கொண்டார். என் இதயம் குடும்பம் மற்றும் அவளுடைய அன்புக்குரியவர்களுக்காக செல்கிறது அவர்கள் இந்த சோகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அலியா பட், ஹிருத்திக் ரோஷன், சாரா அலி கான், சுஹானா கான் மற்றும் கரீனா கபூர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைப் பகிர்ந்துகொண்டு நீதிக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
ஹிருத்திக் ரோஷன் தனது எக்ஸ் தளத்தில், “ஆம், நாம் அனைவரும் சமமாக பாதுகாப்பாக உணரும் சமூகமாக நாம் பரிணமிக்க வேண்டும். ஆனால் அதற்கு பல தசாப்தங்கள் ஆகும். இப்போதைக்கு நீதி இது போன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான ஒரே வழி மிகவும் கடுமையான தண்டனையாகும், அது அத்தகைய குற்றவாளிகளிடமிருந்து வாழும் பகல் வெளிச்சத்தை பயமுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் மகளுக்கு நீதி கேட்பதில் நான் துணை நிற்கிறேன், நேற்று இரவு தாக்கப்பட்ட அனைத்து மருத்துவர்களுடனும் நான் நிற்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்னும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்பதை நாம் உணர வேண்டும். நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின் பத்து ஆண்டிற்கு பிறகு, மற்றொரு மோசமான சம்பவம், ஆனால் எதுவும் மாறவில்லை" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகை சமந்தா, பாலியல் வன்முறை ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது என பாடகி சின்மயி பதிவை பகிர்ந்துள்ளார். மேலும் பிரபல நடிகை மிருனால் தாகூர், "நாம் எந்த உலகத்தில் வாழ்கிறோம்" என பதிவிட்டுள்ளார். அதேபோல் பிரபல நடிகர் ராம் சரண் மனைவி உபாஸனா கொனிடேலா, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பதிவிட்டுட்டுள்ளனர். கரீனா தனது இன்ஸ்டாகிராமில் “12 ஆண்டுகளுக்குப் பிறகு; அதே கதை; அதே எதிர்ப்பு. ஆனால் நாங்கள் இன்னும் மாற்றத்திற்காக காத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தனது பதிவில், " பெண்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றால் அது அவர்களின் பாதுகாப்புதான். எங்களுக்கு அதனை எப்படி பெறுவது எனத் தெரியவில்லை. எப்படி உடை உடுத்தவேண்டும், என்னமாதிரியான உடை உடுத்த வேண்டும், எப்போது வீட்டில் இருந்து வெளியேறவேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், கோபமே வந்தாலும் அதனை எந்த அளவிற்கு வெளிக்காட்ட வேண்டும், நாங்கள் எங்கே சிறுநீர் கழிக்க வேண்டும் , எங்கே தூங்கவேண்டும் என்பதை நாங்கள் எப்போது சுதந்திரமாக தீர்மானிக்கும் காலம் வரும் எனத் தெரியவில்லை" என காட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை நிவேதா பெதுராஜ்," இதுதான் உண்மையான சுதந்திரமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் நடிகை த்ரிஷா மற்றும் மிர்ணாள் தாக்கூர் தங்களது கண்டணங்களை பதிவிட்டுள்ளனர். மிர்ணாள் தாக்கூர் தனது பதிவில், நாம் என்ன மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்" என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் நடிகை ரோஷினி ஹரி பாண்டியன் தனது பதிவில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது ஒரு பெண்ணை அல்ல, இந்த நாட்டின் நம்பிக்கையை என பதிவிட்டுள்ளனர்.
Readmore: வானிலை அலர்ட்…! தமிழகத்தில் இன்று இந்த 14 மாவட்டத்தில் கனமழை…!