For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பருவமழை தொடங்கியாச்சு!… சேற்றுப்புண்ணை தவிர்க்க சில டிப்ஸ்!… வீட்டு வைத்தியம்!

08:50 AM Nov 06, 2023 IST | 1newsnationuser3
பருவமழை தொடங்கியாச்சு … சேற்றுப்புண்ணை தவிர்க்க சில டிப்ஸ் … வீட்டு வைத்தியம்
Advertisement

மழைக்காலங்கள் வந்து விட்டாலே சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரிலே அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும். தேங்கியுள்ள மழை நீரில் கால் வைப்பது, மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும். இது ஒரு பூஞ்சை தொற்று கிருமிகளால் ஏற்படும் அரிப்பே சேற்றுப்புண் ஆகும்.இந்தபூஞ்சை ஈர பதத்தில் தான் வளரும். சேற்றுப்புண் வந்தால் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வந்து விட்டால் அதை குணப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

Advertisement

பாதங்களை சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தேங்கியுள்ள மழை நீரில் மிதிக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் பட்டால் பாதங்களை துணியால் சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். வெளியில் செல்லும்போது காலில் தேங்காய் எண்ணெய்களை தேய்த்துச் சென்றாள் அந்த என்ன பசைக்கு ஈரம் காலில் ஒட்டாது. வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தை பிழிந்து 20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப்புண் மேல் அரைத்து பூச வேண்டும். தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர வேண்டும். இது கிருமிகளை கொள்ளக்கூடிய தன்மை உள்ளது . யூகலிப்டஸ் ஆயில் மற்றும் கற்றாழை சென்னை சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும். மண்ணெண்ணையை சேற்றுக் புண் இருக்கும் இடத்தில் போட்டால் விரைவில் குணமாகும் மேலும் அரிப்பையும் கட்டுப்படுத்தும். காலணிகளை மாற்றி மாற்றி அணிய வேண்டும். ஒரே காலணிகளை போடுவதை தவிர்க்கவும். எட்டு மணி நேரத்திற்கு மேல் ஷூ அணிவதை தவிர்க்கவும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆகவே கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றி கால்களை பராமரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்ணை தடுக்கலாம். வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

Tags :
Advertisement