தொடங்கியது பருவமழை..!! மக்களே இந்த தவறையெல்லாம் பண்ணாதீங்க..!! ஆபத்து..!!
தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்..? என்னென்ன செய்யக்கூடாது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்..?
* மழைக்காலத்தில் குடிநீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
* காய்கறி பயறு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சமைத்தவுடன் சூடாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆறிப்போன உணவுகளால் சளி தொல்லை போன்ற பிற பிரச்சனைகள் ஏற்படலாம்.
* மழைக்காலங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள சூப், ரசம், டீ, காபி உள்ளிட்டவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
* அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
* மழைநாள்களில் அடிக்கடி மின்தடை ஏற்படலாம். எனவே பேட்டரி செல், மெழுகுவத்தி கைவசம் இருப்பது முக்கியம்.
- * மழைக்காலங்களில் திடீர் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
* மழை காலங்களில் மின் விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மழைக்காலங்களில் நீர் தேங்கி இருப்பதால், சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாது. எனவே, வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
* சாலையோரம் இருக்கும் மின்சாதன பொருட்களையோ மின் கம்பிகளையும் தொடக்கூடாது.
* மழைக்காலங்களில் கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டுக்கு வெளியிலோ, மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ தேவையற்ற பொருள்களை போட்டு வைப்பதைத் தவிருங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு.
* மழை நேரங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானது.
* மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுதுபார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம்.
* வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடை மாற்றுவது மழைக்கால நோய்களில் இருந்து காக்கும்.
* தொலை தூர பயணங்களை, வானிலை அறிவிப்பு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்கவும்.
என்ன செய்யக் கூடாது..?
* மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அது தொடர்பாக அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* இடி, மின்னலின்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
* மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது.
* மழை பெய்து வரும் போது தயிர், வெண்ணெய், நெய் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
Read More : வீடு, மனை வாங்கப் போறீங்களா..? அப்படினா தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பாருங்க..!!