கொரோனாவை போல பெருந்தொற்றாக மாறுகிறதா குரங்கு அம்மை? - WHO விளக்கம்
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா பெருதொற்றாக மாறுமா, மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என்றும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், நாம் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய் பரவலை முற்றிலும் அழிக்க போகிறோமா? அல்லது இதனை புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சூழலில் சிக்கப் போகிறோமா நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இந்த குரங்கு அம்மை நோயில் இருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது என தெரிவித்தார். மேலும் இந்த குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Read more ; ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!! பொதுமக்கள் ஹேப்பி..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!