For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’குரங்கு அம்மை பாதிப்பு’..!! மத்திய அரசை பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Minister M. Subramanian has said that the central government is handling the measures to prevent monkeypox very well.
05:23 PM Aug 21, 2024 IST | Chella
’குரங்கு அம்மை பாதிப்பு’     மத்திய அரசை பாராட்டிய அமைச்சர் மா சுப்பிரமணியன்
Advertisement

குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவலாகி வருகிறது. விமானம், கப்பலில் வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை. அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குரங்கு அம்மைக்கான பிரத்யேக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணி, பன்னாட்டு விமான நிலையங்களில் நடக்கிறது" என்று தெரிவித்தார்.

Read More : வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் என்ன நடவடிக்கை தெரியுமா..? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Tags :
Advertisement