முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாளுக்குநாள் அதிகரிக்கும் குரங்கம்மை!... 6 பேர் உயிரிழப்பு!… 117 பேர் பாதிப்பு!… வியட்நாமில் அச்சம்!

07:07 AM Dec 26, 2023 IST | 1newsnationuser3
Advertisement

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது. நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுவரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹுய்ன் தி துய் ஹோ கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 பாதிப்புகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

முன்னதாக, கடந்த வருடம் உலகம் முழுவதும் 90 ஆயிரம் மக்களை பாதித்த குரங்கம்மை நோய் மீண்டும் வேகமாக பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து சர்வதேச அளவில் பரவலாம் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால் ஆசன வாய் மற்றும் பிறப்புறுப்புகளில் சொறி சிரங்கு ஏற்பட்டு அவற்றிலிருந்து சீழ் வடியும் நிலை உருவாகும். மேலும் இந்த நோய்க்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
117 பேர் பாதிப்பு6 பேர் உயிரிழப்புMonkey disease increasevietnamகுரங்கம்மைநாளுக்குநாள் அதிகரிப்புவியட்நாமில் அச்சம்
Advertisement
Next Article