For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!… தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.74 கோடி பறிமுதல்!

07:08 AM Apr 13, 2024 IST | Kokila
காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் … தமிழகம் முழுவதும் இதுவரை ரூ 74 கோடி பறிமுதல்
Advertisement

Seized: நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடியை 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2.83 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 70 சதவீத வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை 4.36 கோடி பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்களர்களுக்கு பூத் சிலிப் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தமுறை நூறு சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. விரைவில் அதுவும் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது வரை வருமான வரித் துறையினர் 74 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறினார்.

Readmore: பரபரப்பு…! போலி மருத்துவரின் கிளினிக்கை திறந்து வைத்த திமுக எம்.பி ஆ.ராசா…!

Advertisement