ஈரானின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர்!
ஈரான் அதிபர் இம்ராஹிம் ரைசி, விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது மொக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1, 1955 இல் பிறந்த மோக்பர், விபத்தில் பலியான அதிபர் ரைசியைப் போலவே, முன்னாள் அதிபர் அலி கமேனிக்கு நெருக்கமானவர். 2021-ல் ரைசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மொக்பர் முதல் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.