For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Moeen Ali | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்தார் மொயின் அலி..!! ரசிகர்கள் ஷாக்..

Moeen Ali announces international retirement after being snubbed for Australia white-ball series
12:51 PM Sep 08, 2024 IST | Mari Thangam
moeen ali   சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்தார் மொயின் அலி     ரசிகர்கள் ஷாக்
Advertisement

மூத்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி தனது 37வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரில் இருந்து விலகிய பிறகு மொயின் ஒய்வை அறிவித்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு 37 வயதாகிறது. நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக ஏராளமான போட்டிகளில் ஆடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். இதுதான் சரியான நேரம். நான் எனது வேலையை செய்துவிட்டேன்.

நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். நீங்கள் இங்கிலாந்திற்காக முதன்முதலில் ஆடும்போது எத்தனை போட்டிகளில் ஆடப்போகிறீர்கள் என்று தெரியாது. 300 போட்டிகளுக்கு நெருக்கமாக ஆடியுள்ளேன். தொடக்கத்தில் சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டிலே சென்றது. மோர்கன் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு எடுத்துச் சென்றதும் வேடிக்கையாக இருந்தது.

நான் மீண்டும் இங்கிலாந்திற்காக விளையாட முயற்சிக்கலாம். ஆனால், உண்மையில் நான் விளையாட மாடடேன் என்று தெரியும். ஓய்வு பெற்ற பிறகும் என்னால் விளையாட முடியும் நான் உணர்கிறேன். ஆனால், விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அணி சுழற்சியாக உருவாக வேண்டும். விளையாட்டில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். நான் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என்ன கொண்டு வந்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும். நான் நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நான் உணர்ந்த வரையில் மகிழ்ச்சியாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வீரராக திகழ்ந்து வரும் மொயின் அலி ஐ.பி.எல். தொடரில் 67 போட்டிகளில் ஆடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 அரைசதங்களுடன் 1162 ரன்கள் எடுத்துள்ளார். 2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மொயின் அலி கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆடி முக்கியமான வீரராக உலா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; உயில் எழுதாத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

Tags :
Advertisement