For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் பலனடைந்தவர் அதானி மட்டுமே!!" - உதயநிதி விமர்சனம்

03:21 PM Apr 09, 2024 IST | Mari Thangam
 மோடியின் பா ஜ க  ஆட்சியில் பலனடைந்தவர் அதானி மட்டுமே      உதயநிதி விமர்சனம்
Advertisement

பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியில் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம் என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்

Advertisement

சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச் சாவடி என்ற இடத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால்தான் திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றியை பெறும்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு பக்கம் எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. நான் சவால் விடுகிறேன், அவரால் நிச்சயம் வெற்றிபெற முடியாது. தமிழக வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிடவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்” என்றார்.

மேலும், "பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரைவார்த்துவிட்டார். மோடியின் பாஜக ஆட்சியில் அதானி மட்டுமே பலனடைந்தார். பிரதமர் மோடியால் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம்” என விமர்சித்தார்.

Tags :
Advertisement