For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆட்சி அமைக்க உரிமைக் கோரி இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி!

Modi will meet the President today at 6 pm to claim the right to form the government
04:37 PM Jun 07, 2024 IST | Mari Thangam
ஆட்சி அமைக்க உரிமைக் கோரி இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி
Advertisement

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார்.  இதுதொடர்பாக மோடி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.  இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார்.  ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார்.

Read more ; இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!! இனியாவது உஷாரா இருங்க..!!

Tags :
Advertisement