ஜூன் 9 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி..!! 8000 பேருக்கு அழைப்பு..!
நாட்டின் 18வது மக்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய கூட்டணி கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. எனவே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர் தொடர்ந்து 3 முறை பிரதமர் நாற்காலியில் அமரும் வாய்ப்பை மோடி பெற்றுள்ளார்.
அதேசமயம் வீழ்த்த முடியாத தலைவர் என்ற பிம்பம் உடைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் பலமான கோரிக்கைகள் ஒருபுறம் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பதவியேற்பு விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஜூன் 8ஆம் தேதி மோடி பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி வருகின்ற ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு NDA கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
Read more ; மனிதர்களை கொல்லும் ஆபத்தான கடற்கரை எங்க இருக்கு தெரியுமா..?