"மோடி பதவி விலக வேண்டும்"... "பாஜக கொள்கையை கேலிக்கூத்தாக்கிய திட்டம்" - சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேட்டி.!
2018 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் சட்டங்கள் செல்லாது என அறிவித்தது.
நிலையில் தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி பதிவு செய்துள்ளார். தேர்தல் பத்திரம் என்பது மோடியின் மோசமான ஐடியா என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
தேர்தல் பத்திரங்களால் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் மோடி கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் தொடர்பான கொள்கைகளை கேலிக்கூத்தாக்கியது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பதிவு செய்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. இவர் கடந்த சில தினங்களாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் கத்தார் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஷாருக்கான் பேச்சுவார்த்தை நடத்தி தான் முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவித்ததாக பரபரப்பு ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் பத்திரங்கள் செல்லாத என் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது .