பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி..!! மொத்த அமைச்சரவையும் கலைப்பு..!!
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது. 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜகவுக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியையே பாஜக இந்த முறை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பின் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் புதிய அமைச்சரவையை அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More : ஒரு பூத்தில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கிய அண்ணாமலை..!! வைரலாகும் தகவல்..!! உண்மை என்ன..?